சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(88) நேற்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நேற்று மறைந்தார்.
இதையடுத்து அவரது உடல் வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார். இந்நிலையில் இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போப் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கின்போது 1 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும், குறிப்பிட்ட நாளில் எவ்வித கொண்டாட்டங்களும் இருக்காது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.