அசோக் செல்வன், சரத்குமார் நடித்து வெற்றிப் பெற்ற ‘போர் தொழில்’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் ராஜா. இவர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கான கதையை எழுதியுள்ளார். இதை ‘ஓ மை கடவுளே' படத்தைத் தயாரித்த ஹாப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் அசோக் செல்வன், அபிநயா செல்வம் தயாரிக்கிறார்கள்.
அசோக் செல்வன் ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இதில் பணியாற்றும் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். அசோக் செல்வனின் 23-வது படமான இதை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்குகிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.