மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் செவ்வாயன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று பேசிய அதிபர் விளாடிமிர் புடின், ‘‘ உக்ரைனுடனான மோதலை தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து தொடங்க விரும்புகிறேன். நாம் எதிர்கொள்வதற்கு நிறைய பிரச்னைகள் உள்ளன.
ஆனால் சீன அதிபர் , இந்தியப் பிரதமர், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா அதிபர்கள் இந்த பிரச்னையை கையாளுவதற்கு அதிக நேரம் செலவிடுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. விரோதங்களை நிறுத்துவதற்கான திட்டங்களுடன் உடன் படுகிறோம் ” என்றார். இதனிடையே மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காவை சந்தித்து பேசினார். 30 நாள் போர் நிறுத்த திட்ட முன்மொழிவு குறித்து ஆலோசித்தார்.
The post போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு புடின் நன்றி appeared first on Dinakaran.