கீவ்: ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்ய அதிபர் புடின் மீறி விட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. உக்ரைன் – ரஷ்ய போர் 3 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி உக்ரைன் மீது ஏப்ரல் 19ம் தேதி(நேற்று முன்தினம்) மாலை 6 மணி முதல் 20ம் தேதி(நேற்று) நள்ளிரவு 12 மணி வரை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈஸ்டர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறி விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி தன் எக்ஸ் பதிவில், “ரஷ்யா ஈஸ்டர் தினத்தையொட்டி அறிவித்த போர் நிறுத்தத்தை மதிப்பதாக ஒரு பொய்யான தோற்றத்தை காட்டி உள்ளது.
ஆனால் புடின் அறிவித்த 30 மணி நேரத்தில், உக்ரைன் மீது 387 குண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. மேலும் 19 தரை வழி தாக்குதல்களை நடத்தியது. இது கண்டனத்துக்குரியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா மதிக்க வேண்டும். மேலும் 30 நாள்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
The post போர் நிறுத்த ஒப்பந்தத்தை புடின் மீறி விட்டார் appeared first on Dinakaran.