மதுரை: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனி போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனி போலீஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தனி பாதுகாப்பு கோருபவர்களுக்கு எல்லாம் காவல்துறை பாதுகாப்பு வழங்க இயலாது. பாதுகாப்பு அலுவலர் ஒருவர் இருப்பது சமூகத்தில் அந்தஸ்தை மேம்படுத்தும் என்ற எண்ணம் உருவாகி விடக்கூடாது. மனுதாரர் மீது 10 வழக்குகள் உள்ளன; இத்தகைய நபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
The post போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.