17 வயதான ஆஷா ராய், பெண்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்க ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் வங்கதேசத்தின் வடக்கு பகுதியில் நடக்கவிருந்த இந்த போட்டியை ரத்து செய்யுமாறு இஸ்லாமிய கடும்போக்குவாதிகள், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களை கட்டாயப்படுத்தியதால், ஆஷாவின் கனவுகள் நொறுங்கி விட்டன.