மாமல்லபுரம்: மகளிர் தினத்தை யொட்டி புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றி பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை கூறியிருப்பதாவது: பெண்களின் மகத்தான சாதனைகளை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், உலக அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில், இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை பார்வையாளர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி கண்டுகளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மகளிர் தினத்தையொட்டி புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றி பார்க்கலாம் appeared first on Dinakaran.