சென்னை: வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள் பெண்கள்தான் என மகளிர் தினத்தையொட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: அன்பை அள்ளி கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பை காட்டும் தோழியாக, தர்மத்தை சொல்லும் பாட்டியாக என, வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள்.
தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர்தினம் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், இன்று நீங்கள் அச்சத்துடன் இருக்கின்ற நிலை மாறி, மிகவும் பாதுகாப்புடன், சுதந்திரமாக செயல்பட்டு, பல சாதனைகளை புரிகின்ற காலமாக நம் ஆட்சிக்காலம் நிச்சயம் இருக்கும்.
The post மகளிர் தினம்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து appeared first on Dinakaran.