புதுடெல்லி: மகா கும்பமேளாவில் பதஞ்சலி நிறுவனம் சார்பில் பக்தர்களுக்கு இலவச யோகா சொல்லிக் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. அதோடு “ஒவ்வொரு இந்தியரும் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா களைகட்டியுள்ள நிலையில், யோகா குரு பாபா ராம்தேவ், அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு இலவச யோகா மற்றும் தியான முகாம் நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மகா கும்பமேளாவின் தெய்வீக சூழ்நிலையை அனுபவிக்கும் அதே வேளையில், பக்தர்கள் உடல்நலம், ஆன்மிகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு அமைந்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.