புதுடெல்லி: பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ம் தேதி (புதன்கிழமை) பயணம் மேற்கொள்கிறார். சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்கிறார் என்று பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
‘பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-க்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், அவர் சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்வார். பௌஷ் பூர்ணிமாவில் (ஜனவரி 13, 2025) தொடங்கிய மகா கும்பமேளா 2025, உலகின் மிகப்பெரிய ஆன்மிக மற்றும் கலாச்சார ஒன்று கூடலாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரி வரை தொடரும்.