சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு திராவிட மாடல் அரசு தீர்வு கண்டுள்ளது. அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் மக்களுடன் முதல்வர் திட்டமாகும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் 13 முக்கியமான துறைகள் தொடர்பாக சேவை மற்றும் வசதிகளை மக்களிடையே கொண்டு செல்கின்றனர் ஊரக வளர்ச்சி, வருவாய் நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலம், சிறுபான்மையினர் நலம், சமூகநலம் மாற்றுத்திறனாளிகளின் நலம், மின்சாரம், பி எஸ் சி, எம் பி சி எஸ் மற்றும் எம்எஸ்எம்இ போன்ற துறைகள் அடங்குகின்றது
தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்திற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 13 துறைகளுக்குமான பிரதிநிதிகள் ஒரே இடத்தில் இருக்கின்றனர், அதனால் மக்கள் தனிதனி துறை அலுவலங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம் இந்த முகாமில் சேவை கோரிக்கைகளை மற்றும் புகார்கள் அரசியல் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.
வருவாய்த்துறையினரிடம் நிலப்பதிவுகள் சொத்து வரிகள் மற்றும் பிற வருவாய் தொடர்பாக புகார் அளிக்கலாம், நகராட்சி நிர்வாகத்துறையிடம் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக உள்ள புகார்களும், கிராமப்புற வளர்ச்சி அதிகாரிகளிடம் கிராமப்புற உள் கட்டமைப்பு, விவசாய மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றது. புகார்கள் வழங்கப்படும் நிலையில் 30 நாட்களுக்குள் வழங்கப்பட்டுள்ள புகார்களுக்கு தீர்வு காணப்படுகின்றது.
மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக நகர்ப்புறங்களில் 2058 முகாம்கள் நடத்தப்பட்டன. 2058 முகாம்கள் நடத்தப்பட்டு 9.05 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. 15 அரசு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து பட்டா மாறுதல் உள்பட 44 அடிப்படை சேவைகள் வழங்கப்படுகின்றன. ஊரகப்பகுதிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தி 2,344 முகாம்கள் மூலம் 12.525 ஊராட்சிகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முகாம்கள் மூலம் பெறப்பட்ட 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு திராவிட மாடல் அரசு தீர்வு கண்டுள்ளது என்றும் அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் மக்களுடன் முதல்வர் திட்டம் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
The post மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு திராவிட மாடல் அரசு தீர்வு appeared first on Dinakaran.