விருதுநகர்: விருதுநகர் – சாத்தூர் இடையே இ.குமாரலிங்கபுரத்தில் ஜவுளி பூங்கா அமைக்க சிப்காட் சார்பில் 1,500 ஏக்கர் கையப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கண்மாய் உள்ளது. கண்மாயில் வண்டல் மற்றும் கரம்பை மண் அள்ள அளித்த அனுமதியை பயன்படுத்தி, கண்மாய்க்குள் பல ஆயிரம் யூனிட் கிராவல் மண்ணை அள்ளியதாக புகார் எழுந்தது. இந்த மண் திருட்டை தடுக்க தவறியதாக வருவாய்த்துறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் ஆயினர்.
இந்த மண் திருட்டு தொடர்பாக அதிகாரிகள் யார், யாருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரங்கள் அடங்கிய டைரியின் பக்கங்கள் இணையத்தில் பிடிஎப் வடிவத்தில் வைரலாகி வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சமாக வழங்கப்பட்டது என பெயர் விபரத்துடன் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த டைரி விவரங்கள் உண்மைதானா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post மண் திருட்டில் லஞ்சம் வாங்கியதாக அதிகாரிகள் பட்டியல் வலைத்தளங்களில் வைரல் appeared first on Dinakaran.