* நடவடிக்கை எடுக்குமா காவல் துறை
மதுராந்தக: மதுராந்தகம் நகரத்திற்குள் பீக் அவர்ஸ் எனப்படும் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் கல்குவாரி லாரிகள் உள்ளிட்ட கனரக லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ேமலும், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அந்தக் கல்குவாரியில் இருந்து கற்கள், மண், ஜல்லிக்கல், எம் சாண்ட் ஆகியவற்றை கனரக லாரிகளில் ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.
இந்நிலையில், மதுராந்தகம் நகரில் எப்பொழுது மக்கள் கூட்டத்துடன் பரபரப்புடன் இருக்கக்கூடிய ஹாஸ்பிடல் ரோடு, ஜிஎஸ்டி சாலை, தேரடி சாலை, சூனாம்பேடு சாலை ஆகிய முக்கிய சாலைகள் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கல்குவாரி லாரிகள் சென்று வருகின்றன.
காலை, மாலை வேளைகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் (பீக் அவர்சில்) இந்த சாலைகள் எப்போதும் நெரிசலுடன் காணப்படும். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது, பொதுமக்கள் சென்றுவர முடியாமல் போக்குவரத்து நெரிசலில் காத்திருந்து உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும், ஹாஸ்பிடல் சாலையொட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளும் செயல்படுகிறது. அந்த பள்ளி மாணவ, மாணவிகள், கல்குவாரி லாரிகளை பார்த்து அச்சப்பட்டு சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மதுராந்தகம் நகரத்திற்குள் கல்குவாரி லாரிகள் மற்றும் கனரக லாரிகள் சென்று வராமல் தடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
The post மதுராந்தகத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் கனரக லாரிகளுக்கு தடை விதிக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.