சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞர் அணி சார்பில் நேற்று முன்தினம் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் மாநில இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்து 500க்கும் மேற்பட்ட பேரமைப்பு இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் இளைஞர் அணி ஒருங்கிணைப்பு, மற்றும் செயல்பாடுகள், மே 5, 42-வது மாநாட்டில் இளைஞர் அணியின் பங்கேற்பு, இளைஞர் அணி வலிமைப்படுத்த பேரமைப்பு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மதுராந்தகத்தில் நடைபெறும் மே 5, 42-வது வணிகர் அதிகார பிரகடன மாநாட்டில் இளைஞர் அணி சார்பாக 25,000 இளைஞர்களுக்கு குறையாமல் பங்கேற்பார்கள் என கூட்டத்தில் இளைஞர்கள் அணி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு சீருடை, தொப்பி வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பால்ஆசிர், சென்னை மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரதாப்ராஜா, மாநிலப் பொருளாளர் ஹாஜி சதக்கத்துல்லா, மாநிலத் தலைமைச் செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
The post மதுராந்தகத்தில் மே 5ம் தேதி வணிகர்கள் அதிகார பிரகடன மாநாடு: 25,000 இளைஞர்கள் பங்கேற்பார்கள் என விக்கிரமராஜா தகவல் appeared first on Dinakaran.