மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டம் தொடங்கப் பட்டு 8 ஆண்டுகளை கடந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு விருதுநகர், வாஞ்சி மணியாச்சி வழியாக ரயில் வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் கேரளா செல்லும் ரயில்கள் உட்பட அதிக ரயில்கள் இயக்கப்படுவதாலும், கிராசிங்குகளாலும் பயண நேரம் அதிகமாகிறது. கூடுதல் ரயில்களை இயக்க முடியாத சுழல் உள்ளது.