மதுரை: தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மதுரை ஆசிரியைக்கு மருத்துவ செலவு தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் தனலெட்சுமி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கு ரூ.1,22,254 செலவானது. இந்த தொகையை அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் திரும்பக் கோரி மனு அளித்தார். அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதால் சிகிச்சைக்கான செலவு தொகையை திரும்ப வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தனலெட்சுமி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.