அவனியாபுரம்: ஐதராபாத்தில் இருந்து மதுரைக்கு நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 25 நிமிடம் தாமதமாக 3.25க்கு புறப்பட்டு மதுரை நோக்கி வந்தது. மாலை 5.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க வந்தபோது, பலத்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. பின்னர் மழை குறைந்தவுடன் விமானம் தரை இறங்க அனுமதி கிடைத்ததால் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 6.05 மணிக்கு தரையிறங்கியது. இந்த விமானத்தில் இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 147 பயணிகள் இருந்தனர். அனைவரும் பத்திரமாக தரையிக்கப்பட்டனர்.
The post மதுரையில் கனமழை; 1 மணிநேரம் வானில் வட்டமடித்த விமானம் appeared first on Dinakaran.