மதுரை: மதுரையில் திமுக நடத்திய பிரமாண்ட பொதுக்குழுவுக்கு போட்டியாக, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ம் தேதி நடத்த உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மதுரையில் கடந்த 1-ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை மத்திய பாஜக அரசுக்கு எதிரானவையாகும்.