தமிழக அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கடிதத்தில் முதல்வர் தெரிவித்திருப்பதாவது: கடந்த ஜன.31-ம் தேதியிட்ட தங்களின் கடிதத்தில், திறன்மிகு குழந்தைகள் மையம் (Mission Saksham Anganwadi & POSHAN 2.0), மகளிர் சக்தி இயக்கம் (Mission Shakthi) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் (Mission Vatsalya) போன்ற மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு ஜன.29-ம் தேதி நிலவரப்படி ரூ.716.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது என தெரிவித்திருந்தீர்கள்.