புதுடெல்லி: பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4 எம்பிகளைத் தவிர்த்து, மத்திய அரசு சசி தரூரின் பெயரை தேர்வு செய்துள்ளது. இதனால் திருவனந்தபுரம் எம்.பி.க்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே மோதல் வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நிலைப்பாடு குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க அமைக்கப்பட்டிருக்கும் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழுவினை வழிநடத்த இருக்கும் ஏழு எம்பிகளில் சசிதரூரும் ஒருவராவார்.