இந்தியாவில் முதல்முறையாக ஆழ்கடலின் 6000 மீட்டர் ஆழத்திற்கு விஞ்ஞானிகள் மனிதர்களை அனுப்பவுள்ளனர். அதற்காக சமுத்ரயான் திட்டத்தின்கீழ் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு மத்ஸயா 6000 என்ற நீர்மூழ்கியை வடிவமைத்து வருகின்றனர். அது எப்படி செயல்படும்? அதன் சிறப்பு அம்சங்கள் என்ன?