அதிமுக – பாஜக கூட்டணி நிச்சயமற்ற கூட்டணி என்று சொல்லி வரும் திமுக, தங்களது கூட்டணி கட்டுக்கோப்புடன் இருப்பதாக சொல்லி வருகிறது. அதில் கல்லெறியும் விதமாக “திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என கொளுத்திப் போட்டிருக்கிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.
“நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அந்தக் கூட்டணிக் கட்சியானது வாஜ்பாய் காலத்தில் எங்களோடு இருந்த கட்சிதான்” என எல்.முருகன் தெரிவித்திருப்பதை வைத்துப் பார்த்தால் அது மதிமுக என்பது தெளிவாகிறது. ஆனால், உண்மையிலேயே அந்தக் கட்சி பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதா அல்லது இது பாஜக-வின் தந்திரமா என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கிறது.