சென்னை: மருது சகோதரர்கள் சிலைக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சருக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். ரூ.1 கோடியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து கருணாஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது; “தமிழினத்தின் வீரமரபின் அடையாளம், மண் விடுதலைக்கான முதல் முகவரி மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 22.01.2025 புதன் அன்று அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமையப்பெறும் திருவுருவச் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு மட்டுமல்லாமல், ரூ.50 இலட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினைத் திறந்துவைக்கிறார்.
சிவகங்கைச் சீமையின் பெருமைக்கு மேலும் வலுசேர்க்கும் தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்து நன்றியை நான் சார்ந்த முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் மனமார தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post மருது சகோதரர்கள் சிலைக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சருக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நன்றி appeared first on Dinakaran.