கோலாலம்பூர்: மலேசியா பாட்மிண்டன் தொடரில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய் 19-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கென்டா நிஷிமோடாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்றது.