நாமக்கல்: திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில், ‘அரிசன் காலனி’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அகற்றி, மல்லசமுத்திரம் கிழக்கு என மாற்றக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக் கறிஞர் ஜி.அன்பழகன், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து, ‘அரிசன் காலனி’ என குறிப்பிடப்பட்டி ருந்ததை, ‘ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளி மல்ல சமுத்திரம் கிழக்கு’ என மாற்றம் செய்யும்படி ஆணையம் உத்தர விட்டது. இந்நிலையில், மல்லசமுத் திரம் அரசுப் பள்ளிக்கு நேற்று வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த, ‘அரிசன் காலனி’ என்பதை கருப்பு பெயின்ட் அடித்து அழித்தார்.