ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.
இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். ரிக்கல்டன் 2 ரன்களுடன், ரோஹித் 7 ரன்களுடனுன் வெளியேறினர். வில் ஜாக்ஸ் அரை சதத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சூர்யகுமார் யாதவ் 35, திலக் வர்மா 7, ஹர்திக் பாண்டியா 1, நமன் தீர் 1, கார்பின் போஷ் 27, தீபக் சஹர் 8 என 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் எடுத்தது மும்பை அணி.