ராணிப்பேட்டை / அரக்கோணம்: “மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் சிஐஎஸ்எப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது.” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தையொட்டி, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அதேபோல் அரக்கோணத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் அமித் ஷா கலந்து கொண்டார்.