புதுடெல்லி: மாநிலங்களவையில் ஏற்படும் அமளிக்கு மிகப் பெரிய காரணமே அதன் தலைவரான ஜக்தீப் தன்கர்தான் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இன்று மதியத்துக்கு முன்பாகவே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, "நாட்டின் துணைக் குடியரசு தலைவர்களாக டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ஷங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் போன்ற பல பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள்.