காரைக்குடி: ‘மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மீட்கும் வரை சட்டப் பேராட்டம் தொடரும்’ என காரைக்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் தனது சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டிய லட்சுமி வளர்தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.21) திறந்து வைத்தார். தொடர்ந்து நிர்வாக கட்டிடத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைப்பெற்ற விழாவுக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.