*சண்முகையா எம்எல்ஏ வேண்டுகோள்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிளையூரணி ஊராட்சி மன்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து சண்முகையா எம்எல்ஏ தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பது, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள், வளர்ச்சி திட்டப் பணிகள் தொய்வில்லாமல் நடப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சண்முகையா எம்எல்ஏ பேசுகையில், ஊராட்சி பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி அனைத்து துறை அதிகாரிகளும் ஒற்றுமையுடன் கண்காணித்து மக்கள் நலன் கருதி பணியாற்ற வேண்டும்.
முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மக்களுடன் முதல்வர் என்ற அடிப்படையில் மக்களுடன் அதிகாரிகள் இணைந்து மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி பெருமை சேர்க்க வேண்டும். எந்தவிதமான உதவிகளோ, பணிகள் குறித்தோ எந்த நேரமும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்(மேல்நிலை)கணேசன், உதவி திட்ட அலுவலர் முனியசாமி, ஓட்டப்பிடாரம் வட்டார கல்வி அலுவலர் பவனந்தீஸ்வரன், புள்ளியல் அலுவலர் நாகராஜன், பிடிஓக்கள் பானு, ஐகோர்ட் மகாராஜா, பொறியாளர் ரவி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராமசாமி, உதவி நிர்வாக பொறியாளர் குமார், மின்சார வாரியம் செயற்பொறியாளர் சின்னத்துரை, உதவி செயற்பொறியாளர் பிரேம், உதவி மின் பொறியாளர் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் மகேஷ் குமார், உதவி பொறியாளர்கள் ஹரிஹரசுதன், முருகேஸ்வரி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை பொறியாளர் முத்தையா, திமுக ஒன்றிய செயலாளர் சரவணகுமார்,
துணை செயலாளர்கள் கணேசன், ஹரிபால கிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் மைக்கேல்ராஜ், பிலோமின் ராஜ், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், கிளை செயலாளர்கள் காமராஜ், பாரதிராஜா, சக்திவேல், பொன்னுச்சாமி, ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், கப்பிகுளம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மாப்பிள்ளையூரணியில் வளர்ச்சி பணிகள் கலந்தாய்வு அதிகாரிகள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் appeared first on Dinakaran.