மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 13 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் லீக் சுற்றின் முடிவில் மோகன் பகான் எஸ்ஜி, எஃப்சி கோவா, பெங்களூரு எஃப்சி, நார்த்ஈஸ்ட் யுனைட்டெடு எஃப்சி, ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி எஃப்சி ஆகிய 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன.
இதில் மோகன் பகான் அணி லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்து ஷீல்டை வென்றிருந்தது. இந்நிலையில் பிளே ஆஃப் சுற்று அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதன்படி நாக் அவுட் போட்டி வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து இறுதிப் போட்டி ஏப்பரல் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகின்றது.