புவனேஸ்வர்: மத்திய சட்டத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: மாவட்ட நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலுவை வழக்குகளை முடித்து வைப்பதற்காக மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மாலை நேரங்களில் நீதிமன்ற விசாரணை நடத்த மத்திய அரசு பரிசீலிக்கிறது.
இதற்காக மாவட்டங்களில் 785 மாலை நீதிமன்றங்களை அமைக்க மத்திய சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் இந்த நீதிமன்றங்கள் அமையும். இதன்மூலம் நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை தீர்த்து வைக்க முடியும்.