சென்னை : மினி பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களின் சிரமத்தைக் குறைக்க மாநகரப் பேருந்துகள் இயக்க முடியாத இடங்களில், குறுகிய தொலைவுகளுக்கு மற்றும் ரயில் நிலையங்களை பேருந்து நிலையங்களோடு இணைக்கும் வகையில், சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிற்றுந்துகளுக்கான கட்டணங்களை தமிழ்நாடு அரசு மாற்றியத்துள்ளது. புதிய ஒருங்கிணைந்த சிற்றுந்து திட்டத்தில் கட்டணங்களை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மினி பேருந்துகளுக்காக டிக்கெட் கட்டண விவரம் பின்வருமாறு:
முதல் 4 KM தூரத்திற்கு ரூ.4
4 KM முதல் 6 KM வரை – ரூ.5
6 KM முதல் 8 KM வரை – ரூ.6
8 KM முதல் 10 KM வரை – ரூ.7
10 KM முதல் 12 KM வரை – ரூ.8
12 KM முதல் 14 KM வரை – ரூ.9
14 KM முதல் 16 KM வரை – ரூ.9
16 KM முதல் 18 KM வரை – ரூ.9
18 KM முதல் 20 KM வரை – ரூ.10
வரும் மே 1ம் தேதி முதல் புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மினி பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.