பிரபல யூடியூப்பரான ஹரி பாஸ்கர் நாயகனாக அறிமுகமாகும் படம், ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’. இதில், லாஸ்லியா, பிக் பாஸ் ரயான், ஷா ரா, சித்ரா லட்சுமணன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி, இன்வேட் மீடியா சார்பில் நிதின் மனோகர் தயாரித்துள்ள இதை பி.வாசுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். வரும் 24-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.