‘கருடன்’, ‘விடுதலை 2’ படங்களுக்குப் பிறகு பிறகு சூரி நடித்து வரும் படம் ‘மாமன்’. இதன் படப்பிடிப்பு திருச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் நடைபெற்று வருகிறது. தாய்மாமனுக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டமே கதைக்களம் என்பதால் இப்படத்துக்கு ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு ’கொட்டுக்காளி’, ‘விடுதலை’, ‘கருடன்’ என தொடர்ந்து சீரியஸ் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த சூரி, இப்படத்தின் ஆக்‌ஷன் கலந்த கலகலப்பான கேரக்டரை தேர்வு செய்திருக்கிறார் என்பதை முதல் பார்வை போஸ்டர்களின் மூலம் யூகிக்க முடிகிறது. ஒரு போஸ்டரில் காமெடியை பிரதானமாகவும், இன்னொரு போஸ்டரில் ஆக்‌ஷனையும் மையக்கருத்தாக பயன்படுத்தி இருக்கிறது படக்குழு.