மும்பை: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
கிரிக்கெட் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை, ஸ்பான்சர்ஷிப் ஆகிய பிரச்சினைகள் காரணமாக 2015-ம் ஆண்டு இந்த தொடரை நிறுத்துவதாக ஐசிசி அறிவித்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பரில் இத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிஎஸ்கே அணி பட்டம் வென்றிருந்தது.