சென்னை: வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதன் எதிரொலியாக, மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் திருவான்மியூர் குப்பம் வரை 2,300 செயற்கை இழை படகுகளும், 772 விசைப் படகுகளும் உள்ளன. இந்தப் படகுகளுக்கு எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது.