சென்னை: பாம்பன் பகுதி மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் டோனா பிரிட்டோ என்பவருக்குச் சொந்தமான ஐஎன்டி டிஎன் 10 எம்எம் 3030 என்ற விசைப்படகையும், அதிலிருந்த 14 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று உள்ளனர்.