சென்னை: முடிச்சூரில் ரூ.42.70 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பேருந்து நிலையத்தை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.58 கோடியே 70 லட்சம் செலவில் 3 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.15 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்கா திறக்கப்பட்டது. கோயம்பேடு சந்தையில் ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
The post முடிச்சூரில் ரூ.42.70 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்..!! appeared first on Dinakaran.