ரியாத்: போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்யா உக்ரைன் அதிகாரிகள் சவுதியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ம் ஆண்டு போர் தொடங்கியது. ரஷ்யா, தனது எல்லைப் பகுதியில் உள்ள உக்ரைன் நகரங்களை போரின் தொடக்கத்தில் கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து இழந்த பெரும்பாலான பகுதிகளை மீட்டது.
தற்போது உக்ரைன் மீது ரஷ்யா அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் 3 ஆண்டை நெருங்கும் நிலையிலும் போர் நீடிக்கிறது. இதனிடையே அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுப்பேன் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் பேசினார். இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்யா உக்ரைன் அதிகாரிகள் சவுதியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இருநாட்டு அரசு அதிகாரிகள் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
The post முடிவுக்கு வருமா போர்?.. ரஷ்யா-உக்ரைன் அதிகாரிகள் அடுத்தவாரம் சவுதியில் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.