சென்னை: இந்தியன் வங்கியின் 2025-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள வங்கியின் தலைமையகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
பின்னர், வங்கி மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பினோத் குமார் செய்தியாளர்களிடம் கூறியது: 2025-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை முடிந்த முதலாவது காலாண்டில், இந்தியன் வங்கியின் நிகர லாபம் 23.69 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.2,973 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2024-ல் முதலாவது காலாண்டில் நிகர லாபம் ரூ.2,403 கோடியாக இருந்தது.