சென்னை: ‘முதல்வரின் புத்தாய்வுத் திட்ட’த்தின் கீழ் 2024-26 ஆண்டுகளுக்கு பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டுள்ள 25 இளம் வல்லுநர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில், பல்வேறு தொழில் மற்றும் கல்வி பின்புலம் சார்ந்த இளம் வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்தி கொள்ள, ‘முதல்வரின் புத்தாய்வுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.