வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருள் நெல்லிக்காய்தான்.
*சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
*உள் உறுப்புகளை பாதுகாக்கிறது.
*புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.
*முதுமையை தள்ளிப் போடுகிறது.
*தோல் சுருக்கங்களை நீக்கி புத்துணர்வோடு வைக்கிறது.
*ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
*உணவு செரியாமையை சரி செய்கிறது.
*கல்லீரலின் நண்பன் நெல்லிக்கனி.
*இதில் நார்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
*நம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதன் வாயிலாக சிறிய நோய்த் தொற்றுகளைக் கூட நெருங்க விடாமல் உடலுக்கு அரணாக விளங்குகிறது நெல்லிக்கனி.
*நெல்லியில் 100 கிராமில் சுமார் 100 மி.லி. அளவு காலிக் அமிலம் இருக்கிறது. கொலஸ்ட்ரால் இல்லை. மாவுச்சத்தும் குறைவாக உள்ளது.
*டிரை கிளிசரைட்ஸ் அளவைக் குறைப்பதில் சிறந்து விளங்குவதும். அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதும் இதன் சிறப்பு.
*100 கிராம் நெல்லியில் 470 மி.லி. வைட்டமின் சி உள்ளதால் மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடென்டாகச் செயல்படுகிறது.
*நெல்லிக்கனியில் உள்ள மூலப் பொருட்கள் கல்லீரலில் உருவாகின்ற சைக்டோ குரோம்களின் அளவினைக் குறைத்து கல்லீரல் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது.
*தினமும் 1 அல்லது 2 நெல்லிக்கனி உண்ண நம் உடல் இதமாகி ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது.