ஆப்கானிஸ்தான் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கீயின் இந்தியப் பயணம் குறித்துப் பாகிஸ்தானில் கடுமையான விவாதம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் தன்னை அவமதிப்பதாகக் கருதும் இச்சூழ்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், ஆப்கானிஸ்தான் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.