மும்பை: மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை அருகேயுள்ள எலிபென்டா தீவில் புகழ்பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்கரையிலிருந்து படகுகளில் செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோருடன், நீல்கமல் என்ற படகு மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி நேற்று மாலை புறப்பட்டது. அப்போது அந்த வழியாக கடற்படையின் ரோந்து படகு சென்றது. அந்த படகு நேற்று மாலை 3.55 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகத்தில் மோதியது. இதில் பயணிகள் படகு பலத்த சேதம் அடைந்து, ஒரு பக்கமாக சாய்ந்தது. இதனால் படகில் இருந்த பயணிகள் சிலர் கடலில் விழுந்தனர்.