திருவள்ளூர்: மதுரவாயல் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வீடுகளுக்கு முன்பு மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் கோலமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மும்மொழிக் கொள்கையை கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தற்போது மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை மதுரவாயல் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள். அந்த கோலத்தின் மூலம் “இந்தியை திணிக்காதே, மீண்டும் மொழிப்போரை தூண்டாதே” என்றும், “தமிழ்நாட்டிற்கு மும்மொழி கொள்கை வேண்டாம்” என்ற வாசகத்தின் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
The post மும்மொழிக் கொள்கை விவகாரம்.. கோலம் போட்டு ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்..!! appeared first on Dinakaran.