மதுரை: மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,
மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
தமிழகத்தில் இரண்டு மொழி கொள்கை எடுத்துக் கொண்டதால் நல்ல பலன் கிடைத்துள்ளது. 1968-ல் இருந்து இன்று வரை மும்மொழிக் கொள்கை பேசப்பட்டு வருகிறது. 60 வருடம் ஆனாலும் மும்மொழிக் கொள்கையை எங்கேயும் அமல்படுத்த முடியவில்லை.
தோல்வி அடைந்த மாடலை தமிழ்நாட்டில் திணிக்க முயற்சி
தோல்வி அடைந்த மாடலை இங்கு கொண்டு வந்து, வெற்றி அடைந்த மாடல் மத்தியில் பயன்படுத்தக் கூறுவது எப்படி நியாயமாகும்?. இருக்கும் கட்டடங்கள், ஆசிரியர்கள், நிதியை வைத்து எப்படி சிறப்பாக நடத்த முடியும் எநாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் குறுக்கு வழியில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சி ன மாநில அரசு முக்கிய இலக்காக கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை குறைக்க சதி
தேசிய அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழ்நாட்டில் சிறப்பாக பயன் கிடைத்துள்ளது. இந்தியாவில் எங்குமே மும்மொழிக் கொள்கை முழு அளவில் இல்லை. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருந்தாலும் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருமொழிக் கொள்கையைக்கூட முழுமையாக நிறைவேற்ற முடியாதவர்கள் நம் மீது மும்மொழி கொள்கையை திணிக்க பார்க்கிறார்கள்.
The post மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி appeared first on Dinakaran.