வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் ராஜ்ஜிய ரீதியாகவும், விளையாட்டு ரீதியாகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் சங்கம் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.

