
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் நாடுகடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் மெகுல் சோக்ஸியை கைது செய்தது பெல்ஜியம். நிதி மோசடி தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி இந்தியா தரப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

