புதுடெல்லி: மெட்டா நிறுவனம் ஏஐ பிரிவுக்கு திறமைவாய்ந்த அலெக்ஸாண்டர் வாங்-கை தலைமை அதிகாரியாக நியமித்துக் கொண்டது.
அலெக்ஸாண்டர் வாங், 2016-ம் ஆண்டில் தனது 19-வது வயதில் ஸ்டார்அப் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அவர் தனது நண்பர் லூசி குவாவுடன் இணைந்து ஸ்கேல் ஏஐ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார். தங்களது கனவை நனவாக்க கடினமாக உழைத்தனர். அதன் பயனால் குறுகிய காலத்தில் ஸ்கேல் ஏஐ நிறுவனம் தொழில்நுட்பத் துறையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.